Monday, November 19, 2012


                                           திருவண்ணாமலை வரலாறு :




திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றி பாடியுள்ளனர். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில் உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்கு கிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது. அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள், கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.

மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம். ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.



திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபம் திருவிழா- 2012 :



திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து விழாக்களை காட்டிலும் கார்த்திகை தீப திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.கார்த்திகை தீப திருவிழா இவ்வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி  2012-ல் கொண்டாடப்படுகிறது.இந்த திருவிழா கார்த்திகை பிரம்மோட்சவம் என்றும் அழைக்கப்பட்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில்முதல் நாள (18.11.2012கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இதை துவாஜரகோதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும் எடுத்து சொல்வது வழக்கமாக உள்ளது. மேலும் பஞ்ச மூர்த்திகளான கணபதி, முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு  

வாகனத்தில்   பஞ்சமூர்த்திகள் எடுத்துச்செல்லப்படுகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவின் இரண்டாம் நாளில சந்திரசேகர பெருமானை சூரிய வாகனத்தில் எடுத்து செல்வதில் துவங்கி இரவில் பெரியநாயகர் பெருமானைஇந்திரவிமானத்தில் (இந்திரதேவன் ரதத்தில்)ஊர்வலமாக எடுத்துச்செல்வதுடன் முடிகிறது.

கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் நாளில் பெரியநாயகர் பெருமான் சிம்ம வாகனத்தில் (சிங்க தேரில்) ஊர்வலம் இரவில் தொடங்கும். 
நான்காம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் காமதேனு வாகனத்தில் ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது. விருட்சம் தரும் கற்பக விருட்ச மரமுடன் பவனி வருவார். இக்கற்பக விருட்ச மரமானது வரும் பக்தர்களுக்கு அவர்கள் பிராத்தனையை நிறைவேற்றும் என்பது மக்களிடையே நிலவும் பரிபூரண நம்பிக்கை.
கார்த்திகை தீப திருவிழா ஐந்தாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக செல்வார். 25 அடியுள்ள இந்த வாகனம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த வாகனத்தில் 17 அடி கொண்ட அழகிய கொடையுடன் ஊர்வலம் செல்வது பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியை தரும்.
ஆறாம் நாள் கார்த்திகை திருவிழாவில் பெரியநாயகர் அலங்கரித்த வெள்ளி வாகனத்தில் ஊர்வலம் செல்வதை பார்க்க பக்தர்கள் கூட்டம் திரளாக காத்திருக்கும். 

ஏழாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் பெரியநாயகர் பெருமான் மரத்தால் செய்யப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்ட அகலமான ரதத்தில் ஊர்வலமாக செல்வார்.
கார்த்திகை தீப திருவிழாவின் எட்டாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வருவார். இந்த குதிரை வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் குதிரையின் நான்கு கால்களும் தரையை தொடாமல் ஆகாயத்தில் மிதக்கும். இதை மக்கள் வியப்புடன் பார்க்க காத்திருப்பார்கள்.
கார்த்திகை திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெரியநாயகர் கைலாச வாகனத்தில் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வூர்வலம் பெரும்பாலும் இரவில் நடப்பது வழக்கம். 

பத்தாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவின் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா தீபம் தீபம் ஏற்றப்படும். இத்தீபம் அருணாச்சலேஸ்வரரின் உருவத்தை குறிப்பதால் உலகம் எங்கும் உள்ள பக்தர்கள் இக்காட்சியை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இரவில் பெரியநாயகர் பெருமான் தங்கத்தால் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறார். இதை காண மக்கள் திரளாக காத்திருக்கிறார்கள். இந்த தரிசனம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது.

கார்த்திகை தீப திருவிழாவின் பதினொன்னாம் நாள் அருணாச்சலேஸ்வரர் தெப்ப குளத்தில் தெப்பத்தில் வருவது தெப்பத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் பன்னிரெண்டாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறுகிறது. இதை கிரி பிரதட்சனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவுடன் கார்த்திகை தீபவிழா இனிதே முடிவடைகிறது. பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் திருவருளை பெற்று மன நிறைவுடன் அவர்கள் ஊரை நோக்கி திரும்பி செல்கின்றனர்.
திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217அடி உயர மாலை அணிவிப்பு:-



திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அண்ணா மலையார் கோவில் முன் பக்க ராஜகோபுரத்திற்கு 217 அடி உயர பூ மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சாமந்தி மற்றும் பல்வேறு பூக்கள் உள்ளன. கோபுரத்தின் இரு பக்கமும் 2 மாலைகள் மேலே இருந்து கீழே வரை தொங்கவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர் ஒருவர் இதை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

Monday, November 5, 2012


ஆயுஷ்ய ஹோமம்

நீண்ட நாள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் தவறாமல் ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும். குழந்தையின் முதல் பிறந்த நாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்து பலரின் ஆசியைப் பெற வைக்க வேண்டும். இந்த ஹோமத்திற்கு தேவைப்படும் இரண்டு முக்கிய பொருட்கள் : 

1. கருங்காலி சமித் 

2. சாதம் (அன்னம்) முதலில் சங்கல்பம் செய்து கொண்டு விக்னேசுவர பூஜை செய்து, கும்பத்தில் புண்யாஹ வசனம் செய்து ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும். 

குழந்தையின் நட்சத்திர ராசி பெயர் சொல்லி ஆயுஷ்ய ஸூக்தம் நட்சத்திர மந்திரம் சொல்லி கருங்காலி ஸமித், அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றிற்குத் தனித்தனியாக 108 அல்லது 1008 முறை மந்திரத்தைச் சொல்லி முதலில் ஸமித்தாலும், பிறகு அன்னத்தில் சரிபாதியைக் கொண்டும், பிறகு நெய்யாலும் ஹோமம் செய்ய வேண்டும். 

பின்னர் நெய்யால் 11 ரிக்குகளால் ஹோமம் செய்ய வேண்டும். அடுத்து சுவிஷ்டக்ருத் ஹோமம் செய்து பாதி அன்னத்தை, வெல்லம், நெய் சேர்த்துக் குழந்தைகளுக்குப் பிராசன மந்திரம் மூலம் மூன்று முறை நெல்லிக்காயளவு ஊட்டி விடவும். பிறகு குரு, தட்சிணை தர வேண்டும். 

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மங்கள ஆரத்தி எடுத்து இனிதே ஹோமத்தை முடிக்க வேண்டும். எல்லா பிறந்த நாளிலும் தான தர்மங்களுடன் நட்சத்திர - ஆயிஷ்ய ஹோமமாக செய்தால் ஆயுள் பலம் கெட்டியாகும்

சூரியன்


ஒன்பது கிரங்களில் சூரியன் முதலாவது கிரகமாகும். சூரியன் மனித உடலில் மூளைக்கும் எலும்புக்கும் அதிபதியாக விளங்குகிறார். சூரியன் ஆண் தன்மையுள்ள கிரகம் என்பதால் இவரால் ஆதிக்கம் செலுத்தப்படும் மனிதர்களிடம் தைரியம், வீரியம், ஆத்ம பலம், விசுவாசம் போன்றவை அதிகமாகக் காணப்படும். இவர் பித்தம் தொடர்பான வியாதிகளையும், உஷ்ண சம்பந்தமான வியாதிகளையும்  ஏற்படுத்துவார்.
 
இவர் பிதுர்க்காரகன் என்று அழைக்கப்படுகிறார். பிதுர் என்றால் தந்தை என்று பொருள். இவரைக் கொண்டு தந்தையைப் பற்றியும், அவருடைய குண நலன்களைப் பற்றியும், அவர் வழி உறவினர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். தந்தை என்ன சொத்து சேர்ப்பார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஓம் என்ற ஓசையில் இருந்து  சூரியன் தோன்றினான் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.
 
காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள் என்று பாரதம் கூறுகிறது. சூரியன் ஏறி வரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. அத்தேரை  ஏழு குதிரைகள் இருக்கின்றன. ஏழு குதி ரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறம் உடையவை. இந்தக் குதிரைகளை   ஓட்டுகிற சாரதி அருணன் என்ற பெயருடையவன்.
 
இவன் காலில்லாத நொண்டி. அத்தேர் மேற்கு முகமாக ஓடுகிறது. மேருமலையை வலமாகச் சுற்றி வருகிறது. சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்று  இரு மனைவிகள். எமன், சனி, அசுவினித் தேவர், சுக்கிரீவன், கர்ணன் முதலியோர் மகன்கள். யமுனை, பத்திரை முதலியோர் மகள்கள்.
 
சூரியனை  அருக்கன், ஆதித்தன், கதிரவன், கமலநாயகன், கனலி,  ஞாயிறு, தினகரன், பகலவன்,  பகன், பரிதி, பானு, மார்தாண்டன், வெங்கதிரோன், வெய்யோன் ஆகிய வேறு பெயர்களாலும்  அழைக்கிறார்கள். பாபக் கிரகமான இவர், ஒவ்வொரு ராசியிலும் சுற்றி வர ஒரு மாத காலம் ஆகிறது. அவர் பன்னிரண்டு ராசிகளில் பன்னிரண்டு மாதங்கள் சுற்றி வருகிறார்.
 
அவர் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்சம் பெறுகிறார். வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் பகை பெறுகிறார். ஆனி மாதத்தில்  மீதுன ராசியில் சம பலம் பெறுகிறார்.  ஆடி மாதத்தில் கடக ராசியில் நட்பு பெறுகிறார். ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் ஆட்சி பெறுகிறார்.  புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில்  சம பலம் பெறுகிறார். அவர் ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் நீசமடைகிறார்.
 
கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் நட்பு பெறுகிறார். மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் நட்பு பெறுகிறார். தை மாதத்தில் மகர ராசியில் பகை பெறுகிறார். மாசி மாதத்தில் கும்ப ராசியில் பகை பெறுகிறார். பங்குனி மாதத்தில் மீன ராசியில் நட்பு பெறுகிறார். சூரிய பகவான் நவநாயகர்களிலே  தலைவர், சுபக்கிரகர். மூவகை  நாடிகளிலே பிங்கலை நாடியாகவும், மூவகைக் குணங்களிலே  சாத்வீக குணமாகவும், இருப்பவர்.
 
குலத்திலே சத்திரியர். சிவனது முக்கண்களிலே வலக் கண்ணாக  இருப்பவர். புகழ், மங்களம், உடல் நலம், ஆட்சித்திறம், செல்வாக்கு, முதலியவற்றைக் கொடுப்பவர். சூரியனைச் சிவப்பு மலர்களால் அர்ச்சிப்பதாலும் சிவப்பு  வஸ்திரம் உடுத்திக் கொள்வதாலும், மாணிக்க  மணியை அணிந்து கொள்வதாலும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதாலும், சிவப்பு நிறப் பசுவை தானம் செய்வதாலும், கோதுமை தானியத்தைத் தானம் செய்வ தாலும், சூரிய நமஸ்காரம் செய்து வருவதாலும் சூரியக் கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.