Wednesday, May 25, 2016


காலனை வென்ற சிவபெருமான்:



சிவனுக்கு காலனை வென்றதால் ‘மிருத்யுஞ்ஜயன்’ என்ற திருநாமம் உண்டு. ‘மரணத்தை வென்றவர்’ என்பது இதன் பொருள்.


சிவனுக்கு காலனை வென்றதால் ‘மிருத்யுஞ்ஜயன்’ என்ற திருநாமம் உண்டு. ‘மரணத்தை வென்றவர்’ என்பது இதன் பொருள். ‘மிருத்யு’ என்றால் மரணம்.

மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்தபோது, சிவபெருமான் காலனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. காலதேவனின் கடமையைச் செய்ய சிவனே தடையாக இருந்ததாக நமக்குத் தோன்றும்.

ஆனால், இந்த விளையாடலில் சிவன் யமனுக்கும் அருள்புரியவே செய்தார். பார்வதியோடு அர்த்தநாரீஸ்வரராக இருந்த சிவன், இடக்காலால்தான் யமனை உதைத்தார்.

இடபாகம் அருளே வடிவான அம்பாளின் பாகம் என்பதால், யமனின் உள்ளத்தில் தர்ம சிந்தனையே தழைத்தது. இதையடுத்து அவன் தர்மப்படி நடந்துகொண்டான்.

கோயில்களில் நடக்கும் பூஜையை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்:


நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதிக நேரத்தை கோயில்களில் செலவிடுவது ஒன்று தான் வழி.

தேவையில்லாத உலக விஷயங்களில் ஈடுபட்டும், அளவுக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பப்படுவதும் போன்றவை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதிக நேரத்தை கோயில்களில் செலவிடுவது ஒன்று தான் வழி.

வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்து கொண்டு மனம் ஒன்றி தரிசித்து வாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்களில் உங்களுக்கு இணையாரும் இருக்க முடியாது. இதை விட வேறு சிறப்பான பலன் கிடையாது.


திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன?

திருமண சடங்குகளில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்ற சடங்கு.

கற்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது. பெண்களிடம் மட்டும் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர்.

திருமண சடங்குகளில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்ற சடங்கு. இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் அதற்கான அர்த்தம் பலருக்கு தெரியாது. அதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா?

திருமணத்தில் இணையும் மணமகனும், மணமகளும் கற்பு நெறி தவறாமல் வாழ்வோம் என உறுதி மொழி ஏற்பதே அம்மி மிதிக்கும் சடங்காகும்.

அருந்ததி, வசிஷ்டர் இருவரும் கற்பு நெறி தவறாமல் வாழ்ந்தவர்கள். வானில் ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கும் அருந்ததியை வணங்கி ஆசி பெறுவதற்காகவும் இது செய்யப்படுகிறது.

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை?

பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும்.

ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. 

விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

சிங்கம்புணரி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்:


சிங்கம்புணரி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சிங்கம்புணரியில் சேவுக மூர்த்தி அய்யனார் திருக்கோவில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அதுபோல் இந்த வருடமும் கடந்த 15–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9–ம் நாள் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற் றது. முன்னதாக காலையில் சுவாமி சேவுகமூர்த்தி அய்யனார், பூர்ணா, புஸ்பகலா தேவிமார் களுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் நான்கு ரத வீதிகள் வழியாக தேர் சுற்றிவந்து கோவில் முன்வந்து நிலையை அடைந்தது.
தேர் நிலையை அடைந்த தும் பக்தர்கள் மூடை, மூடையாக கொண்டு வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை நிலைக்கல் லில் வீசி எறிந்து உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒரே நேரத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைப்பதை பார்த்த பக்தர்களும், பொது மக்களும் மெய்சிலிர்த்தனர்.
இப்பகுதியில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இந்த கோவில் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அனைத்து மக்களின் ஒற்றுமையுடன் நடத்தப்படும் இந்த திரு விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tuesday, May 17, 2016


சிவனுக்கு உகந்த ஆனி உத்திரம் விரதம்:


உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்களுக்கெல்லாம் மூலப்பரம்பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஆனி உத்திரம் ஒன்று.

உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்களுக்கெல்லாம் மூலப்பரம்பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஒரு வருடத்தில் சிவபெருமானுக்கு 6 நாட்கள் மிக சிறப்பு வாய்ந்த நாட்களாக, அதாவது அபிஷேகத்திற்கும் சிவதரிசனத்திற்கும் உகந்த நாட்களாக சொல்லப்படுகின்றன.

இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்திர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷேகங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். 

இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.