Wednesday, May 25, 2016


சிங்கம்புணரி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்:


சிங்கம்புணரி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சிங்கம்புணரியில் சேவுக மூர்த்தி அய்யனார் திருக்கோவில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அதுபோல் இந்த வருடமும் கடந்த 15–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9–ம் நாள் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற் றது. முன்னதாக காலையில் சுவாமி சேவுகமூர்த்தி அய்யனார், பூர்ணா, புஸ்பகலா தேவிமார் களுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் நான்கு ரத வீதிகள் வழியாக தேர் சுற்றிவந்து கோவில் முன்வந்து நிலையை அடைந்தது.
தேர் நிலையை அடைந்த தும் பக்தர்கள் மூடை, மூடையாக கொண்டு வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை நிலைக்கல் லில் வீசி எறிந்து உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒரே நேரத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைப்பதை பார்த்த பக்தர்களும், பொது மக்களும் மெய்சிலிர்த்தனர்.
இப்பகுதியில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இந்த கோவில் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அனைத்து மக்களின் ஒற்றுமையுடன் நடத்தப்படும் இந்த திரு விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment